காலம் கெட்டுப்போச்சு - அப்படினு நான் சின்னவயசா இருக்கும்போது பெரியவுங்க சொல்லுவாங்க, அதெல்லாம் ஒன்னுமில்லை, எப்பவும் போலத்தான் இருக்குனு மைனருங்க வாதிடுவாங்க. ஆனாப் பாருங்க பெரியவுங்க ஆனா இந்த டயலாக்க கட்டாயமா நானும் சொல்லவேண்டி வரும்னு எதிர்பார்க்கல.
போனவாரம் என் மகள கல்லூரியிலிருந்து (விடுதியிலிருந்து) அழைத்துவரச் சென்றிருந்தேன், அப்போ அந்த வார்டனம்மா கிட்ட பேச்சுக்கொடுத்தேன் (எப்பவும்போல!) அவிங்க சொன்னாங்க - கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்த பெண் - தனது பாய்பிரண்டுடன் விடுதியிலிருந்து - தனது அண்ணன் என்று கூறி ஒரு நாள் வெளியே சுற்றச்சென்றுவிட்டது, அந்தச் சமயம் பார்த்து, மகளைப்பார்த்து வெகுநாளாச்சே என்று பெற்றோர் இருவரும் வந்துவிட்டனர். அண்ணனுடன் வெளியே சென்றுள்ளாள் என்று வார்டனம்மா கூற, எங்களுக்கு ஒரே பெண்தானே, அண்ணனெல்லாம் கிடையாதே என்று அந்தத்தாய் அப்படியே உறைந்து போய்விட்டாராம். நெஞ்சிலே நெருப்பைக் கொட்டிட்டாளே என்று ஒரே அழுகை. பெண் வரும்வரை காத்திருந்து கல்லூரியிலிருந்தே நீக்கம் செய்து அழைத்துச்சென்றுவிட்டனராம்.
ஒரு கணம் அந்தப்பெற்றோரின் நிலையில் இருந்து பாருங்கள் - அந்த வேதனை புரியும். அதைவிட அந்தப்பெண்ணின் நிலை - அப்பப்பா!
இப்பச் சொல்லுங்க - காலம் கெட்டுப்போச்சுதானே?

நிஜம்தான். ஆனா, காலத்தை பத்தி சொல்லி வளர்க்கும் பொறுப்பு நம்முடையதுதானே!
ReplyDeleteவேதனைதான்.வருத்தமாய் இருக்கிறது
ReplyDeleteஇது மாதிரி விஷயங்கள் எல்லா காலத்திலும் உண்டு .எதிர் காலத்திலும் இது மாதிரி நடக்க வாய்ப்பு உண்டு.
ReplyDelete